தூக்கம் வரலையா!!!, நிம்மதியான தூக்கம் பெற, இதோ ஹீலர் பாஸ்கரின் அறிவுரைகள்


தூக்கம் என்பது மனிதனுக்கும் மிகவும் அத்யாவசியமான ஒரு நிகழ்வு . ஆனால் பலருக்கும் , இரவில் தூக்கம் வருவது இல்லை. புரண்டு புரண்டு படுப்பார்கள் . ஆனால் தூக்கம் வராது. இதிலிருந்து மாறி நிம்மதியாக தூக்கம் வர இப்போது நமக்காக திரு ஹீலெர் பாஸ்கர் அவர்கள் ஒரு சில தகவல்களை நமக்கு தருகிறார். மேலும் படியுங்கள்:
உங்கள் தூக்கத்தினை சரிசெய்ய:

  1. முக்கியமாக முதலில் வடக்கு தலைவைத்து படுக்ககூடாது
  2. இரவில் தூங்குவதற்கு முன் டீ, காபி குடிக்காதீர்கல் , இதனால் தூக்கம் கெட வாய்ப்பு இருக்கிறது.
  3. வெறும் தரையில் படுக்க கூடாது. உடல் உஷ்னத்தினை தரை எடுத்துக்கொள்ளும். ஆதலாம் தூக்கம் கெடும். 
  4. மிகவும் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது இது. அதாவது உடல் உழைப்பு இருப்பவருக்கு மட்டும் தான் தூக்கம் அதிகம் தேவைப்படும், மனதிற்கும் புத்திக்கும் வேலை கொடுத்தவருக்கு தூக்கம் அதிகமாக தேவைப்படாது. ஆதலால் நீங்கள் உங்கள் படுக்கையில் 8 மணி நேரம் படுங்கள் தூக்கம் வரும் போது தூங்குங்கள். இல்லை என்றால் ஒன்றும் பிரச்சனை இல்லை. நீங்கல் ஓய்வு எடுத்தாலே போதும். தூக்கத்திற்கும் ஓய்வுக்கும் இருக்கும் வித்தியாசத்தினை புரிந்து கொள்ளுங்கள். உடல் உழைப்பு இருந்தால் மட்டுமே உங்களுக்கு தூக்கம் தேவைப்படும் . இல்லை யெனில் உங்களுக்க் ஓய்வு மட்டும் போது.
  5. இரவு தூங்குவதற்கு முன்னால் பல் துலக்குங்கள் . இதனால் தூக்கம் நன்றாக வர வாய்ப்பு உள்ளது  . அதே போல் உங்கள் பல்லுக்கும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
  6. உங்கள் மூன்று விரலை வைத்து தாடைக்கு கீழே சற்று மசாஜ் செய்வது போல் தடவினால் நன்றாக தூக்கம் வரும். (view image)
  7. உங்கள் உச்சந்தலையில் இருந்து 2 இஞ்ச் கீழே கைவைத்து தடவி விட்டீர்கள் என்றால் தூக்கம் நன்றாக வர வாய்ப்பு உள்ளது (view image)
அவ்வளவு தான் தூக்கத்தினை சரி செய்வது பற்றிய பதிவு. இதனை மட்டும் சரி செய்து விட்டீர்கள் என்று சொன்னால் உங்களுக்கு நிம்மதியாக ஆழ்ந்த் தூக்கம் வரும் . தூக்கம் உங்கள் உடலினை உள்ள வியாதிகளை நீங்கவும். நீங்கள் நன்றாக வளரவும். என பல செயல்களை புரிகிறது. நன்றாக தூங்குவோம். 
நிம்மதியாக வாழ்வோம்.

more info
video soon

 Video



Post a Comment

0 Comments