இந்த 15 ஐ சரி செய்தால் போதும் உங்கள் உணவே மருந்து | ஹீலர் பாஸ்கர்


உணவே மருந்து , என்பது மிகவும் எதார்த்தமான ஒரு பழமொழி, இந்த உணவை நமக்கு மருந்தாக மாற்றுவதற்கு ஒரு சில வழி முறைகளை ஹீலர் பாஸ்கர் அவர்கள் நமக்கு கூறிகிறார்கள். அதில் முக்கியமானவற்றை இப்போது பார்க்கலாம்,

  1. முதலில் நாம் உணவு உன்ன ஆரம்பிக்கும் முன். இந்த உணவினை கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறிவிட்டு சாப்பிட வேண்டும். அதாவது பிராத்தனை செய்து விட்டு உணவு உன்ண வேண்டும்.
  2. இரண்டாவது , மிகவும் முக்கியமானது . பசி இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும்
  3. முடிந்த வரை ஆறு சுவையையும் உண்ண முயலுங்கள். நீங்கள் உண்ணும் உணவில் ஆறு சுவை இருந்தால், ஜீரனம் நன்றாக நடக்கும்.
  4. உணவை மெல்லும் போது உதட்டை மூடி மெல்லவேண்டும். கூழ் போல் ஆக்கிய பிறகுதான் விழுங்க வேண்டும்.
  5. நீங்கள் உணவு உண்ணும் போது உங்கள் முழு கவனத்தினையும் உணவின் மீது வைக்க வேண்டும்.
  6. உணவு உன்னும் முன் 1/2 மணி நேரத்திற்கு தன்ணீர் குடிக்க கூடாது ( வேண்டாம்). அதே போல் உணவு உன்ணும் போதும் தண்ணீர் குடிக்க கூடாது. அதே போல் உண்டு முடித்த பிறகும் 1/2 மணி நேரம் தண்ணீர் அருந்த வேண்டாம்.
  7. அப்படி தண்ணீர் தாகம் எடுத்தால், நீங்கள் உங்கள் தொண்டை நனையும் அளவு மட்டுமே . தண்ணீர் குடிக்கவேண்டும். நீங்கள் அதிகமாக நீர் அருந்தினால் . அந்த தண்ணீர் "குடலில் உள்ள HCL அமிலம் நீர்த்து போதும்" அந்த அமிலம் நீர்த்து போகாமல் இருக்கும் அளவு தண்ணீர் அருந்திக்கொள்ளலாம்.
  8. குளித்தால் 3/4 மணி நேரத்திற்கு பிறகுதான் சாப்பிட வேண்டும். அதே போல் சாப்பிட்டால் 2. 1/2 மணி நேரம் கழித்து தான் குளிக்க வேண்டும்.
  9. சாப்பிடும் முன் , முகம் , கை , கால் கழுவிட்டு சாப்பிடுவது நல்லது.
  10. TV நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு சாப்பிடக்கூடாது
  11. சாப்பிடும் போது "பேச கூடாது"
  12. காலை தொங்க போட்டு சாப்பிட கூடாது , சம்மனம் போட்டு அமர்ந்து தான் சாப்பிட்ட வேண்டும்
  13.  அம்மாக்கள் தன் குழந்தையோடு சாப்பிட கூடாது. பிள்ளைகளுக்கு பரிமாறி விட்டு பிறகு தணியாக சாப்பிடலாம்
  14. சாப்பிடும் போது புத்தகம் படிக்ககூடாது.
  15. முதலில் ஏப்பம் வரும் போது போதும் என உணவை நிறுத்திக்கொள்ள வேண்டும். பிறகு பசித்தால் மீண்டும் உண்ணுங்கள்.
இந்த 15 செயல்கலை நீங்கள் சரி படுத்தி விட்டீர்கள் என சொன்னால் உங்கள் உணவு உங்களுக்கு மருந்து. எந்த நோயும் உங்களுக்கு அன்டாது. உங்களின் நோய் எதிர்ப்பு திறன். அதிகரிக்கும்.

மேலும் வீடியோ



Post a Comment

0 Comments