நாம் நமது ஷாப்பிங்கில் வீட்டுற்கு தேவையான அனைத்து பொருள்களையும் வாங்குகிறோம், ஆனால் நம் இந்திய திருநாட்டில் ஆலிவ் எண்ணை” உபயோகப்படுத்தும் பழக்கம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆலிவ் எண்ணை சமையல், அழகு, உடல் ஆரோக்கியம், என அணைத்திலும் ஆற்றல் மிக்கது, நாம் இந்த பகுதியில் ஆலிவ் எண்னையை அழகுக்காக பயன்படுத்தும் முறையை பார்க்க இருக்கிறோம்!!
1. ஆலிவ் எண்னை குளியல் ()
ஆலிவ் எண்ணை குளியல் மிகவும் எளிதான ஒரு விஷயம், இதற்கு 5 டேபுள் ஸ்பூன் ஆலிவ் எண்னையை உங்கள் பாத் டப்பில் கலக்கவும், அல்லது நீங்கள் பக்கெட் தண்ணீரில் குளிப்பீர்கள் என்றால், அந்த பக்கெட்டில் 5 ஸ்பூன் ஆலிவ் எண்ணையை கல்க்கவும், பிறகு உங்கள் சாதாரண குளியலை நிறைவேற்றுங்கள்,,,...
அல்லது
நீங்கள் குளிக்க செல்லும் முன் ஆலிவ் எண்னையை உடலில் தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்
2 ஆலிவ் எண்னை உடல் லோஷன் ()
நாம் மார்க்கெட்டில் கிடைக்கும் விலை உயர்ந்த மற்ற கிரீம் களையும் பாடி லோஷன் களையும் வாங்கி உடலை கெடுத்துக்கொள்ளமல், இருக்க ஆலிவ் எண்னையை உடல் லோஷனாக பயன்படுத்தலாம், சொல்லப்போனால், ஆலிவ் எண்னையை பாடி லொஷனாக பயன்படுத்தியவர்கள் திரும்பவும் மற்ற எந்த மார்க்கெட்டில் கிடைக்கும் பாடிலோஷன் களையும் வாங்கமாட்டார்கள் பயன் படுத்தும் முறையானது மிகவும் எளிது ஆலிவ் எண்ணையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ள வேண்டும் சிறிது நேரம் கழித்து, ஷவரில் நிற்கவும், இல்லாதவர்கள் லேசாக குளித்து கொள்ளவும் பிறகு சொஃப்ட் ஆன டவலினால் துடைத்துக்கொள்ளவும், இதன் பிறகு உங்கள் மேனி மிகவும் ஸ்மூத் மற்றும் சொஃப்ட் ஆக இருக்கும்,
3 ஆலிவ் ஆயில் மேக்கப் ரிமூவர்
நீங்கள் கண்களில் உள்ள மேக்கப் களை ரிமூவ் செய்ய ஆலிவ் எண்னைய பயன் படுத்தலாம், இது வாட்டர் ரெசிஸ்டன்ட் மேக்கப் களையும் கூட ரிமூவ் செய்யும்,
மாலை நேரத்தில் நாம் ஆலிவ் எண்ணையை ஒரு காட்டன் துணியில் லேசாக ஊற்றி முகத்தில் மெதுவாக தடவுவதால். அது நம் முகத்தில் உள்ள தேவையற்ற மேக்கப்களை ரிமூவ் செய்யும் அதேடு நம் தேகத்திற்கும் ஊட்டத்தை கொடுக்கும்
4 ஆலிவ் எண்னைய பயன் படுத்தி எப்படி நகங்களை ஷைனிங்க் ஆக்குவது??
இது உண்மைதானுங்க, வெது வெதுப்பான (அதாவது அறை வெப்பநிலையில் ) ஆலிவ் ஆயிலை ஒரு சிறிய கின்னதில் எடுத்து அதில் உங்கள் நகங்களை சிறிது நேரம் ஊரவைப்பதால், உங்கள் நகங்கல் பளபள பெறுவதோடு வலு அடையவும் செய்கிறது
5 ஆலிவ் ஆயில் கண் கிரீம்
நீங்கள் ஆலிவ் எண்னையை கண் கிரீமாகவும் உபயோகிக்கலாம். இது உங்கள் கண்களின் அருகில் உள்ள தோலை வளரவும் பராமரிக்கவும் செய்யும். சிறிய துணியில் ஆலிவ் ஆயிலை எடுத்து, காலையில் அல்லது இரவு தூங்கும் முன் உங்கள் கண்களில் ஒரத்தில் துடைத்துக்கொள்ள வேண்டும்.
6 ஆலிவ் ஆயில் ஃபேஸ் மாஸ்க்
ஒரு முட்டையின் மஞ்சல் கரு வுடன், ஒரு டேபுல் ஸ்பூன் ஆலிவ் எண்ணையை கலந்து உங்கள் முகத்தில் 5-10 நிமிடம் மாஸ்க் செய்யவும் பிறகு அதனை வெது வெதுப்பான மற்றும் குளிர்ந்த நீரில் களுவ வேண்டும்.( நீங்கள் இதில் எலுமிச்சை சாற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.அது உங்கள் முகத்தை பளிச்சென்று ஆக்கும்) இது சாதாரண மற்றும் டிரை ஸ்கின் உள்ளவர்களும் பயன்படுத்தலாம்.
7 ஆலிவ் ஆயில் தலை முடி சிகிச்சை
ஆலிவ் ஆயில் தலைமுடி சிகிச்சையானது விரைவான மற்றும் செய்ய எளிதானது; அது செய்ய 15 நிமிடங்கள் மட்டும் எடுக்கும் நீங்கள். ஆலிவ் எண்ணெய் இரண்டு தேக்கரண்டி மற்றும் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து ஒரு முட்டை மஞ்சள் கரு கலந்து. சுமார் 15 நிமிடங்கள் பயன் படுத்துங்கள். பிறகு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள், உங்கள் தலைமுடி மென்மையானதாக மாறும்
*இங்கு குறிப்பிட்டு இருப்பது Olive Oil Extra Virgin
0 Comments