Which is good Company to work?? எது நல்ல கம்பெனி??

Ar gaming tamil. Blog post.
ரொம்ப நாள் கழிச்சு நான் ப்ளாக் டைப் பண்றேன்.
எனக்கு வந்த ஒரு சின்ன எண்ணம். 
நான் ஒரு கம்பெனி இல் இப்போது வேலை பார்க்கிறேன்.
அதில் உள்ளவர்கள் செல்கிறார்கள். இது நல்ல கம்பெனி வேலை செய் , வேலை செய் என்று.
ஆனால் என்னுடைய அனுபவத்தில் இது ஒரு நல்ல கம்பெனி கிடையாது. 
அதற்காக நான் ஒரு சில அளவுகோல்களை வைத்திருக்கிறேன்.

அதன் அடிப்படையில் இது அவ்வளவு நல்ல கம்பெனி கிடையாது.

1. இந்த கம்பெனியில் வேலை செய்ய நான் 3 ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தி வேண்டும்.
2. அது மட்டும் இல்லாமல் நம்முடைய 10th, +2 சான்றிதழ்களையும் கொடுக்க வேண்டும்
3. அதோடு சேர்ந்த original ஓட்டுநர் உரிமத்தையும் தர வேண்டும்.

இவையெல்லாம் சாதாரணம் தான் என்றாலும் எனக்கு ஒரு சந்தேகம்.
நான் கையெழுத்து, கை நாட்டு வைத்திருக்கிறேன்.
 பிறகு எதற்கு என்னுடைய சான்றிதழ்கள்?????

அதை கொண்டு கம்பெனிக்கு என்ன தான் பயன்.??? 
அது எனக்கு மட்டும் பயன் தர கூடியது. அதை ஏன் அவர்கள் வாங்கி வைத்து கொள்கிறார்கள்.
எனக்கு இது மிக பெரிய சந்தேகம். 
எனக்கு என்னவோ நான் நன்றாக இருக்க கூடாது என்பதுதான் அதன் முழு நோக்கம் என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.?
அதுவும் சம்பளம் 10 தேதிக்கு தான் தருவார்களாம். 

பிச்சைக்காரர்கள்... என்று நான் அவர்களை அழைப்பேன்..

வேலை செய்தவனுக்கு 10 நாட்கள் கழித்து கூலி கொடுப்பது என்ன நியாயம்..

எனது அகராதியில். இது கொடுமை, அநியாயம்...

உங்கள் கருத்து என்ன??

Post a Comment

0 Comments