இது ஒரு மிகப்பெரிய கேள்வி???????
நாம் தமிழர் கட்சியினரால் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் என்ன விஷயத்தை செயல்படுத்த முடியும்?
விடை: ஒன்றையும் செயல்படுத்த முடியாது என்பதே!!
அவர்கள் சொல்லக்கூடிய அனைத்து கோட்பாடுகளும் கேட்பதற்கு இனிமையாக இருப்பதற்கு மட்டுமே தகுதியானது.அதை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு அடித்தளமும் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
என்னது!!?? 15 ஆண்டு காலமாக ஒரு கட்சி அப்படியே அதே நிலையில் இருக்கிறதா ?? எந்த ஒரு முன்னேற்றம் முயற்சியும் அந்த கட்சி எடுக்கவில்லை என்றால் அது உண்மையில் கட்சி தானா?
எதற்காக கூட்டணி வேண்டாம் என்கிறார்கள். எனக்கு இந்த கேள்வி பலகாலமாக இருந்து வருகிறது.
பொதுவாக கேட்டால் நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், அவர்கள் ஊழல் செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள்..
அப்படி என்றால் நீங்கள் ஊழல் செய்ய மாட்டீர்கள் என்பது தானே?!
நீங்கள் போய் சேர்ந்தால் அவர்களும் செய்ய மாட்டார்கள் என்பது தானே எங்களுடைய நோக்கம், எண்ணம், அனைத்துமே!
அதாவது புரிவது போல் சொல்வது என்றால் "பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்" என்பது போல,
நாம் தமிழர் கட்சியினர் என்ன நினைக்கிறார்கள்? திமுகவுடன் சேர்ந்தால் நாமளும் லஞ்சத்திற்கு ஆளாகி விடுவோம் என்று நினைக்கிறார்களா???
அப்படி என்றால் உங்கள் கொள்கை முற்றிலும் தவறு தானே. உங்களால் லஞ்சம் வாங்காமல் இருக்க முடியாதா? திமுகவில் சேர்ந்தாலும் சேராவிட்டாலும்???? உங்களின் உண்மை முகம் தான் என்ன???
லஞ்சம் வாங்காத ஊழல் பண்ணாத ஒரு அரசியல் கட்சியாக நீங்கள் இருந்திருந்தால்!!, நிச்சயமாக திமுகவில் கூட்டணி வைத்திருந்தாலும் நீங்கள் லஞ்சம் வாங்காத ஒரு கட்சிநராகவே இருந்திருப்பீர்கள். !! சரிதானே????
அதை விட்டுவிட்டு திமுக லஞ்சம் செய்கிறார்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள் ஊழல் செய்கிறார்கள் அதனால் நாங்கள் அவர்கள் பக்கம் செல்ல மாட்டோம் என்பது என்ன விதத்தில் நியாயம்?!!
10 ஆண்டுக்கும் மேலாக வெறும் தத்துவங்களையும் இப்படி செய்வேன் அப்படி செய்வேன் என்று கூறுவதுமாக இருந்து கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இருப்பது என்பது உண்மையாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் கூட்டணி வைத்து ஏதாவது ஒன்றை நிகழ்த்திக் காண்பித்து இருப்பார்கள் அவர்கள் சொன்னதில் ஏதாவது ஒன்றையாவது.
உதாரணமாக:
நான் கேள்விப்பட்ட ஒரு சிறிய உதாரணத்தை இப்போது உங்களுக்கு கூறுகிறேன்.
நான் அந்த கட்சிக்கு சார்ந்து பேசுகிறேன் என்று அர்த்தம் கிடையாது. மாறாக நான் கேள்விப்பட்ட இந்த விஷயம் நல்லது என்பது போல் எனக்கு தோன்றியது. அதனால் இங்கு நான் உங்களுக்கு ஷேர் செய்து கொள்கிறேன்.
நாம் அனைவரும் அறிந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை பற்றி தான் உங்களுக்கு கூறுகிறேன்.
2004 -09 காலகட்ட தேர்தலில். திமுக காங்கிரஸ் மற்றும் பாமக போன்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து நின்றன அதில் ஒருவராக இருந்த அன்புமணி ராமதாஸ் என்ற ஒருவர் கூட்டணி கட்சியின் காரணமாக சட்டசபையில் மற்றும் ராஜ்யசபாவில் பேச வாய்ப்பு கிடைத்து சுகாதாரம் மற்றும் குடும்ப வளத்துறை அமைச்சராக அதாவது மத்திய அமைச்சராக பதவியேற்றதன் காரணமாக 2008 ஆம் ஆண்டு நாம் இப்போது பயன்படுத்தும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது அத்தோடு சேர்ந்து பொதுவெளியில் புகைபடிக்க தடை, போதை பொருட்களில் எச்சரிக்கை வாசகங்கள் போன்றவை அமல்படுத்தப்பட்டன.
அப்போது அந்த காலத்தில் அவர் முதலமைச்சராக இல்லை ஒரு நல்ல செயலையை துவங்க நினைத்ததன் காரணமாக அவர் கூட்டணி வைத்து அவர் அதை செய்து முடித்தார்.
இது போன்று நாம் தமிழரின் ஏதாவது ஒன்றை யாராவது கூட்டணி போன்ற கட்சியில் சேர்ந்து அமல்படுத்த முடியுமா என்றால் அவர்கள் அமல்படுத்த வேண்டாம் என்கிறார்கள் என்பது போலவே அவர்களின் ஒட்டுமொத்த செயல்பாடும் இருப்பதாக நான் உணர்கிறேன். இதுவே எனது கோபமாக இருக்கிறது.
ஏதாவது கேட்டால் என்னை முதலமைச்சராக உட்கார வைத்து விடு நான் செய்கிறேன் என்பது முட்டாள்தனமான ஒரு கோரிக்கையாக இருக்கிறது.
0 Comments