மரம் வளர்ப்போம்

வணக்கம்! என் அன்பு நெஞ்சங்களே! இன்று உலக மரம் வளர்ப்பு நாள் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் மரம் செடி கொடிகளை வளர்க்க விருப்பம் அதிகமாக உள்ளது.
Nanaganallur Independance Park
Beautiful Scene From Indipendance Park Nanganallur

Nanaganallur Independance Park
Forest Like chennai Park @Nanganallur

Nanaganallur Independance Park
Playing Kids at Nanganallur Park



அதான் விருப்பம் உள்ளதே பின்பு என்ன தயக்கம்? ஒரு நிமிடம் இருங்கள், நான் இருப்பதோ ஃப்லாட் வீட்டில் இங்கு செடி கொடிகள் அதிகம் இல்லை, அப்படியே இருந்தால் காவா ஓரமா தான் இருக்கும். அந்த செடி கொடிகள் நமக்கு என்ன தருகின்றன என நாம் தெரிந்தால் வீட்டுக்கு ஒரு கம்பியூட்டர் இருப்பது போல், ஒரே ஒரு பூ செடியாவது வைக்க விரும்புவீர்கள்.

மரம் செடி கொடி இவைகள் பச்சை பசேலென இருப்பதால் அதனை போட்டொ எடுத்து பேஸ் புக்கில் போட மட்டும் தான் தெரியும். லைக்கு வருதானு ஆசை படுவீங்க. ஆனா ஒரு செடி வளர்க்கவே அல்லது ஒரு மரம் வளர்க்கவோ ஆசை வந்ததுண்டா?


இனிமெ நாம் இப்படி இருக்க கூடாது!!?? அந்த செடிகள் தான் பகல் பொழுதில் நமக்கு ஆக்ஸிஜன் எனும் பிரான வாயுவை தருகின்றது. கார்பன்-டை- ஆக்ஸைடை உள் இழுத்துக் கொண்டு நமக்கு தேவையான ஆக்ஸிஜனை தருகிறது.

இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா?? எங்கிறீர்களா?
ஒரு நாள் என் அப்பாவ்வுக்கு ஹார்ட் அட்டாக் வந்தது நங்கநல்லூர் இந்து மிஷன் மருத்துவமனையில் சேர்த்தோம். ஒரு நாள் முழுவதுமாக பெட் ரெஸ்ட்டில் இருந்தார். ஒரு நாளுக்கே 16,000 ரூபாய் தாண்டி வந்து விட்டது. இனிமெல் முடியாது நாங்கள் டிஸ்சார்ஜ் செய்து கொள்கிறோம் என கூறினோம். அவர்களும் ஒத்துக்கொண்டு. ஃபீஸ் தொகை செலுத்தும் படி கூறினார்கள். நாங்கள் கட்டும்போது தான் அந்த உண்மைய சொன்னார்கள்., “உங்கள் அப்பாவுக்கும் ஒரு நாள் இரவு முழுவதும் ஆக்ஸிஜன் சப்லை கொடுத்து இருக்கிறோம்” சோ அது மட்டுமே 6000 ரூபாய் என்று. ????????!!!!!!!!@@@@
Nanaganallur Independance Park
Green Grass in Chennai



அப்போழுது தான் யோசித்தேன். இயற்கையில் கிடைக்கும் ஆக்ஸிஜனை நாம் வீனடிக்கிறோம் என....
 ஆகவே என சகோதர , சகோதரிகளே. நீங்கலும் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியாவது வைத்து செடி வளருங்கள். உலகம் செலிக்கும்.

Post a Comment

0 Comments